என்னடா இவ்ளோ ஸ்பீடா இருக்கீங்கhellip ரிலீசுக்கு முன்பே அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தை லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்!

உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் நாளை தான் ரிலீசாகிறது. இந்நிலையில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் நேற்றே அந்த படம் லீக் ஆகி மார்வெல் படக்குழுவை அதிர வைத்துள்ளது.

தமிழில் புதிதாக ரிலீசாகும் பெரிய பட்ஜெட் படங்கள் முதல் சிறு பட்ஜெட் படங்கள் வரை தமிழ் ராக்கர்ஸில் முதல் நாளே வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சி அளித்து வந்த நிலையில், தற்போது பட ரிலீசுக்கு 2 நாட்கள் முன்னமே அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டு ஒட்டுமொத்த சினிமா உலகத்தையே மிரட்டியுள்ளது.

தியேட்டரில் படம் ரிலீசாவதற்கு முன்பே தியேட்டர் பிரின்ட் எப்படி தமிழ்ராக்கர்ஸ்க்கு கிடைத்தது என்ற கேள்விக்கு பதிலாக, நேற்று முன் தினம் லாஸ் ஏஞ்சல்ஸில் அவெஞ்சர்ஸ் படத்தின் ப்ரீமியர் ஷோ காட்சி ஸ்க்ரீன் செய்யப்பட்டது.

படத்தைப் பார்த்த பல விமர்சகர்கள் படம் குறித்த தங்களின் விமர்சனங்களையும் நேற்றே வெளியிட்ட நிலையில், தற்போது தமிழ் ராக்கர்ஸில் லீக் ஆகியுள்ள அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தை அதிகளவில் டவுன்லோடு செய்து இந்திய ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

இதனால், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் வசூல் பாதிக்கும் என்பதால், உடனடியாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்கும் நடவடிக்கையில் மார்வெல் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.

எண்ட்கேமில் அந்த சீன் இல்லை; இந்தியாவில் 24 மணி நேரம் திரையிடப்படுகிறது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்!
More News >>