பஞ்சாபுக்கு வில்லனான டிவில்லியர்ஸ் பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றி!
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 42வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
7 போட்டிகளில் தோல்வி கண்ட பெங்களூரு அணி தொடர்ந்து மூன்று போட்டிகள் மற்றும் ஒரு போட்டி என 4 போட்டிகளில் வெற்றி பெற்று முதன் முறையாக புள்ளிப் பட்டியலில் கடைசி இடமான 8வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கேப்டன் கோலி 13 ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்ப, பார்த்தீவ் படேல் மற்றும் டிவில்லியர்ஸ் ஜோடி சிறப்பாக ஆடியது.
24 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் விளாசி 43 ரன்களை குவித்தபோது, எம். அஷ்வின் பந்துவீச்சில் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து பார்த்திவ் படேல் அவுட்டானார்.
மறுமுனையில் ஆக்ரோஷமாக விளையாடிய டிவில்லியர்ஸ் 44 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் விளாசி 82 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மற்றொரு முனையில் ஆடிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் 34 பந்துகளில் 46 ரன்கள் விளாசினார்.
இதனால், 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது.
இந்த இமாலய ஸ்கோரை சேஸ் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியில் லோகேஷ் ராகுல் 42 ரன்களுக்கும் கிறிஸ் கெய்ல் 23 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
கடைசியாக விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரான் 28 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நவ்தீப் சைனி பந்துவீச்சில் டிவில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதனால், பஞ்சாப் அணியால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 185 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 17 ரன்கள் வித்தியாசத்தில் 4வது வெற்றியை பெங்களூரு அணி பதிவு செய்தது.
இதுபோன்ற ஆட்டத்தை ஆரம்பத்திலேயே ஆடியிருந்தால், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கலாமே என பெங்களூரு ரசிகர்கள் புலம்பி தவிக்கின்றனர்.
கோலி அணிக்கு இந்த ஆட்டமும் வெற்றி கிடைக்குமா? – டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீசுகிறது!