15 கர்ப்பிணிகள் உயிர் இழப்புக்கு காரணம்? ஆய்வு அறிக்கையில் பகீர் தகவல்!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 15 கர்ப்பிணி பெண்கள் உயிர் இழந்தது தொடர்பான ஆய்வு அறிக்கையில் யாரும் எதிர்பாராத தகவல் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 15 கர்ப்பிணி பெண்கள் உயிர் இழந்தனர். அந்த பெண்களின் உடம்பில் கெட்ட ரத்தம் ஏற்றியதால்தான் அவர்கள் உயிர் இழந்தனர் என பகீர் குற்றஞ்சாட்டு கூறப்பட்டது. இந்த உயிர் இழப்புகள் அனைத்தும் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய 3 மருத்துவமனைகளில் நடந்ததாக தகவல்.

ரத்தம் பாதுகாக்கப்பட்ட அறையில் நிலவிய வெப்பநிலை மாற்றத்தால் ரத்தம் கெட்டு போனதாகவும், மருத்துவர்களும் அதனை பாதுகாப்பான ரத்தம் என்று சான்றிதழ் அளித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து ரத்த வங்கி அதிகாரிகள் 3 பேர் மீது குற்ற நடவடிக்கை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஸ் உத்தரவிட்டார்.மேலும் இந்த விவகாரம் தொடர்பாக 10க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் லேப் டெக்னீசியன்கள் மீதும் நடவடிக்க எடுக்க உத்தரவிடப்பட்டது. கர்ப்பிணிகள் உயிர் இறப்புக்கு காரணம் குறித்து ஆய்வு செய்ய மருத்துவ கல்வி இயக்குநரகம் 3 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்தது.

சிறப்பு குழு கடந்த ஒரு மாத காலமாக ஆய்வு செய்தது. அந்த குழு தனது அறிக்கையை நேற்று முன்தினம் சமப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் அசுத்த ரத்தத்தால் தான் கர்ப்பிணிகள் உயிர் இழந்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ கல்வி இயக்குநர் எட்வின் ஜோ அறிக்கை குறித்து கூறுகையில், கர்ப்பிணிகளுக்கு அசுத்த ரத்தம் செலுத்தப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. மேலும் அசுத்த ரத்தம் என ஆய்வில் எங்கும் நிரூபணம் ஆகவில்லை. ரத்த வங்கி நன்றாக செயல்பட்டு வருகிறது. மருத்துவ அறிக்கைகளையும் நாங்கள் கவனத்தில் கொள்கிறோம். மருத்துவக்குழு அலட்சியமாக இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

என்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம் - மனைவியே கொன்று நாடகமாடியது அம்பலம்
More News >>