ரயிலில் கடத்தப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல்
சென்னை ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட வெள்ளி ஆபரணங்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து கடப்பா செல்லும் ரயிலில் கணபத் சிங் என்பவர் இரண்டு பைகளுடன் செல்வதை கவனித்த ரோந்து போலீசார் அதனை சோதனையிட்ட போது, பல்வேறு வகையான வெள்ளி ஆபரணங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.15 லட்சமாகும். இதனையடுத்து கணபத் சிங்கை புத்தூர் ரயில் நிலையத்தில் பிடித்து வைத்தனர்.
இந்த நிலையில் புத்தூர் ரயில் நிலையத்திற்கு வந்த மற்றொரு நபர் சமர்சிங் என்பவர் நகைகளுக்கான ரசீதை காட்டி தமக்கு உரியவை என்று கூற சந்தேகம் அடைந்த ரயில்வே போலீசார் இருவரையும் வருமான வரி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வருமான வரி விசாரணையை அடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பார்த்த ஷாக்கான போலீசார்