ஜெயலலிதா ஆவி பழிவாங்கும்! -கிலி கிளப்பும் ஜோதிடர்
ஜெயலலிதாவின் ஆன்மா, சசிகலாவை பழிவாங்கத் துடிப்பதாக கேரள ஜோதிடர் வேங்கடாசர்மா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ''ஜெயலலிதாவின் ஆன்மாவிடம் பேசுகையில், தன் மரணம் இயற்கையானது அல்ல '' எனக் கூறியதாகவும் தெரிவித்துள்ளர். சசிகலா பதவிக்கு வருவதை ஜெயலலிதா அறவே விரும்பவில்லை. கசசிகலாவை பழிவாங்க அவர் துடிக்கிறார். சசிகலா மட்டுமல்ல 31 பேர் வரை ஜெயலிதாவின் ஆன்மா பழிவாஙகக் காத்திருக்கிறது. தற்போது கூட போயஸ் கார்டனைதான் சுற்றி சுற்றி வருகிறது '' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் அடைந்தபின்னர் அவரின் ஆவி போயஸ் கார்டன் பகுதியை சுற்றி வருவதாகவும் இரவுநேரங்களில் ஓலம் எழுப்புவதாகவும் ஏற்கனவே வதந்தி பரவி வந்தது. இந்தநிலையில் இந்த கேரள ஜோதிடர் வேறு கிலியை கிளப்பி வருகிறார்.