மாற்றம் மிகவும் அவசியமானது..! நம்பிக்கையில் காத்திருக்கும் விஜய் சேதுபதி
அரசியலில் மாற்றம் வேண்டும் என்ற நம்பிக்கையில் வாக்களித்துள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
நடிப்பில் தனி கவனம் செலுத்தி வெற்றிகளைக் குவித்து வரும் விஜய் சேதுபதி, அரசியல் பார்வை கொண்டவர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது, ‘அரசியல்வாதிகளை சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்துவிட்டு, அரசியலை சாக்கடை என்று நினைத்து ஒதுங்கிப் போய்விடாதீர்கள். நம் வீட்டில் சாக்கடை அடைத்துவிட்டால் அதை நாமே சுத்தம் செய்கிறோம். சேவை செய்பவர்கள் யார்? பதவி ஆசை கொண்டவர்கள் யார்? என்பதைக் கண்டறிந்து வாக்களிக்க வேண்டும். அதனால், தேர்தலை புறக்கணிக்காமல், அனைவரும் வாக்களிக்க வேண்டும்’ என்று இளைஞர்களிடம் வலியுறுத்தினார்.
இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய் சேதுபதி, ‘அனைவருக்கும் தற்போது அரசியல் பற்றின புரிதல் இருக்கின்றது. அரசியலில் மாற்றம் வேண்டும் என்பது மிகவும் அவசியமானதே, நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களித்துவிட்டேன். நானும் இளைஞர்களைப் போல் காத்துக் கொண்டிருக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம்’ எனக் கூறியுள்ளார்.
ஐபிஎல் ஆடினது போதும்.. உடனடியாக நாடு திரும்புங்க.. வெளிநாட்டு வீரர்களுக்கு வந்த அதிரடி உத்தரவு!