ஆற்றில் முதலை இழுத்து சென்ற விவசாய தொழிலாளி சடலமாக கண்டெடுப்பு!
சிதம்பரம் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, முதலையால் தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட விவசாய தொழிலாளி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள பெராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமணி. விவசாய கூலித்தொழிலாளி. ஜெயமணியும் அவரது மனைவியும் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது தண்ணீருக்குள் மறைந்து வந்த முதலை ஜெயமணியை கடித்து தாக்கி இழுத்து சென்றது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டனர்.
உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் முதலையை பிடிப்பதில் சிறப்பு அனுபவம் பெற்ற குழுவினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி இரவு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் இன்று அதிகாலையில் ஜெயமணியின் உடல் பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைகாக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆற்றில் முதலை இருப்பதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மேலும் முதலை பிடிக்குமாறு அவர்கள் அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நல்லவர்களாக நடித்து குண்டு போட்ட செல்வந்தர் குடும்பம்!!