மோடி மீண்டும் பிரதமரானால்...! ராகுல் காந்தியே காரணம்...! கெஜ்ரிவால் தடாலடி

பிரதமராக மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு முழுப்பொறுப்பும் ராகுல் காந்தி தான் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சரமாரியாக விமர்சித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் நோக்கமே பாஜகவை தோற்கடிப்பதும், பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவதே ஆகும்.

இந்த தேர்தல் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும். நாட்டை காப்பாற்றவும், அரசியல் அமைப்புச் சட்டத்தை காப்பாற்றவும் போராடுவோம். பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி .முதலில் நாம் இந்தியர்கள், அப்புறம் தான் இந்து, முஸ்லீம் என்ற கோஷத்துடன் ஆம் ஆத்மி இந்த தேர்தலை எதிர்கொள்கிறது.

ஆனால் பாஜகவையும், மோடியையும் தோற்கடிக்க வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தவறி விட்டார். டுவிட்டர் மூலமே கூட்டணி பேச்சு நடத்தியதை எங்கும் பார்த்ததில்லை. ஆனால் ராகுல் காந்தி டிவிட்டரில் கூட்டணி பேச்சு நடத்தினார்.அது வெற்றி பெறவில்லை. தப்பித்தவறி மோடி மீண்டும் பிரதமரானால் அந்தத் தவறுக்கு முழுப்பொறுப்பு ராகுல் காந்தி தான் என்று கெஜ்ரிவால் சரமாரியாக குற்றம் சாட்டினார்.

பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி யில்லை - டம்மி வேட்பாளரை அறிவித்தது காங்
More News >>