சூப்பர் டீலக்ஸ் இந்தி ரீமேக்! - விஜய் சேதுபதியின் ஷில்பா கேரக்டரில் யார்
சூப்பர் டீலக்ஸ் படம் பாலிவுட்டுக்கு செல்கிறது. இது ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
ஆரண்யகாண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் எட்டு வருடங்கள் கழித்து வெளியாகியிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். விஜய்சேதுபதி, சமந்தா, ஃபகத் ஃபாசில், ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது. இப்படம் ஏ சான்றிதழுடன் வெளியானது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தான் படத்தின் தயாரிப்பாளரும் கூட. இப்படத்தின் பட்ஜெட் 13 கோடி ரூபாய். அதில் விளம்பர செலவு மட்டும் 1.5 கோடி ரூபாய். விநியோக செலவு 50 லட்சம். ஆக படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் 15 கோடி.இதில் கேரளா 50 லட்சத்துக்கும், கர்நாடகாவில் 60 லட்சத்துக்கும், ஹிந்தி டப்பிங் உரிமை 75 லட்சத்துக்கும், ஓவர்சிஸ் 2 கோடிக்கும், ஆடியோ ரைட்ஸ் 25 லட்சத்துக்கு விற்பனையானது. தவிர, படத்துக்கு கிடைத்த டிஜிட்டல் ரைட்ஸ் 7 கோடி. இறுதியாக தமிழகத்தில் தியேட்டரில் 12.25 கோடி ரூயாய் வரை 1 வார நாட்கள் வசூலானது. இதிலிருந்து தயாரிப்பாளருக்கு கிடைத்த பணம் 7.5 கோடி ரூபாய். ஆக மொத்தம் தயாரிப்பாளருக்கு கிடைத்த மொத்த வசூல் தோராயமாக 19 கோடி. ஆக, தயாரிப்பாளருக்கு கிடைத்திருக்கும் நிகர லாபம் 4 கோடி ரூயாய். இப்படியிருக்க தற்போது இந்தியில் சூப்பர் டீலக்ஸ் எடுக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. படத்தில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் பாராட்டைப் பெற்றிருந்தாலும் விஜய்சேதுபதியின் திருநங்கை கதாபாத்திரம் சவாலாக அமைந்திருந்தது. இந்த கேரக்டரில் இந்தியில் யார் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.