25 ஆயிரம் குடும்பங்களுக்கு...3 சென்ட் வீடு இலவசம்! செந்தில்பாலாஜி அதிரடி
அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 சென்ட் வீடு இலவசமாக வழங்கப்படும் என திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வாக்குறுதி அளித்தார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு கடந்த வியாழக்கிழமை மக்களவைத் தேர்தலுடன், சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில், காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால், சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்கு தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி அறிவிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அண்மையில், தனது பிரசாரத்தை தொடங்கிய செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். மொடக்கூர், உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் செந்தில்பாலாஜி.
அதன் வகையில், சாந்தபாடி ஊராட்சியில் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது பேசிய அவர்,'காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி அரவக்குறிச்சிக்கு உட்பட்ட பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன்' எனக் கூறினார். அதோடு, '25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 சென்ட் வீடு இலவசமாக வழங்கப்படும். 100 நாள் வேலை செய்பவர்களுக்குத் தாமதமாக சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறிய அவர், தி.மு.க வெற்றி பெற்றால் இதற்குத் தீர்வு காணப்படும்' என்று கூறினார்.
ஒட்டப்பிடாரத்தில் சுயேச்சையாக போட்டி? அதிமுகவை மிரட்டும் கிருஷ்ணசாமி!