கமகமக்கும் வெந்தயக் குழம்பு ரெசிபி..

உடலுக்கு குளிர்ச்சித் தரும் வெந்தயக் குழம்பு எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 1

சிகப்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

தனியாத் தூள் - முக்கால் டீஸ்பூன்

சீரகத்தூள் - கால் டீஸ்பூன்

குழம்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

புளி கரைசல் - ஒரு கப்

பூண்டு - 10

வெந்தயம் - 2 டீஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

வெல்லம் & ஒரு துண்டு

நல்லெண்ணெய் & 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை

கொத்தமல்லி

உப்பு

செய்முறை:

ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் போட்டு பொறிக்கவும்.

அத்துடன், சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.பிறகு, பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

மிளகாய்த் தூள், சீரகத் தூள், தனியாத் தூள், குழம்பு மிளகாயத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்னர், புளி கரைசல், உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொதிக்கவிடவும். கூடவே, வெல்லம் துண்டு சேர்த்து கிளறினால் ருசியாக இருக்கும்.

இறுதியாக, கொத்தமல்லித் தூவி இறக்கினால் சுவையான வெந்தயக் குழம்பு தயார்.

சுவையான சுண்டக்காய் வத்தல் குழம்பு ரெசிபி
More News >>