இப்போதெல்லாம் விஜய் சேதுபதி எங்கு சென்றாலும் தனி விமானங்கள் தான்.. ஏன் தெரியுமா
நடிகர் விஜய்சேதுபதி தனி விமானத்தில் பறந்த புகைப்படங்களை தொகுப்பாளினி தியா இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
கை நிறைய படங்களை வைத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, விளம்பரங்கள், நகைக்கடை துணிக்கடை திறப்பு விழாக்கள் போன்றவற்றிலும் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு, படுபிஸியாக இருக்கிறார். தனி விமானத்தில் பறக்கும் அளவுக்கு மக்கள் செல்வன் பிஸியாகிவிட்டார். இன்று மதுரையில் நடைபெற்ற தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து மதுரைக்கு தனி விமானத்தில் பயணித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்த புகைப்படங்களை பிரபல தொகுப்பாளினி தியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்..முன்னதாக பேட்ட படவிழாவில் கலந்துகொள்ள கேரளாவிலிருந்து தனி விமானத்தில் விஜய் சேதுபதி பயணித்தது குறிப்பிடத்தக்கது. |மேலும் மதுரையில் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம் தேர்தலுக்குப் பின் தமிழக அரசியலில் மாற்றம் வருமா என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், “நல்லது நடந்தே தீரும் என்ற நம்பிக்கையில் நானும் உங்களைப் போலவே வாக்களித்து விட்டு காத்திருக்கிறேன். ம் மாற்றம் வேண்டும். அது அவசியமானது’’ என்றார்.