ராணுவ வீரர் வீட்டில் 7 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் பணம் கொள்ளை
கண்ணமங்கலம் அருகே ராணுவ வீரர் வீட்டில் 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணமங்கலம் அருகே அம்மாபாளையம் குமரன் நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி (28). இவரது கணவர் தினகரன் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 23-ந் தேதி இரவு மகேஸ்வரி தனது வீட்டை பூட்டிக்கொண்டு, தனது தந்தை கோவிந்தசாமி மற்றும் குடும்பத்தினரோடு பெங்களூரில் வசிக்கும் தனது தங்கை வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று மகேஸ்வரியின் வீடு திறந்து கிடப்பதை பார்த்த பக்கத்து வீட்டுகாரர்கள் மகேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்த போது வீட்டின் முன்புற கதவு மற்றும் பின்புற கதவுகள் திறக்கப்பட்டு டிரங்க் பெட்டிகள் உடைக்கப்பட்டு இருந்தது.
போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், என்னென்ன பொருட்கள் திருடுபோனது என்று மகேஸ்வரி புகார் செய்தபின்னரே விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் திருட்டு 7 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் போயிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசு..! –‘சபாஷ்’ ரோபா சங்கர்