கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதால் தண்ணீர் தொட்டியில் குழந்தையுடன் குதித்து தொழிலாளி தற்கொலை

திருப்பூர் மாவட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதால், 3 வயது குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியை சேர்ந்தவர் சதிஷ்குமார் (வயது 34). இவரது மனைவி தவமணி (வயது31). இவர்களுக்கு 3 வயதில் மோனிகா என்ற பெண் குழந்தை இருந்தது. திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள பெருந்தொழுவு கவுண்டம்பாளையத்தில் சதிஷ்குமார் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.

சதிஷ்குமார் பலரிடம் கடன் வாங்கி உள்ளார். இதனை திருப்பி கேட்டு கடன் கொடுத்தவர்கள் மிரட்டி உள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த சதிஷ்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் நேற்று காலை தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் குதித்தார்.

இதில் சதிஷ்குமார் மற்றும் அவரது குழந்தை மோனிகா சம்பவ இடத்திலே மூச்சு திணறி இறந்தனர். தவமணி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கடன் தொல்லையால் குழந்தையுடன் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெருந்தொழுவு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையுடன் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அவினாசி பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நல்லவர்களாக நடித்து குண்டு போட்ட செல்வந்தர் குடும்பம்!!
More News >>