மனைவியுடன் தகராறு கணவன் தற்கொலை
ஈரோடு மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த பெருமாள் மலை, பெரிய மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 37). இவரது மனைவி சுதா. கணவன் மனைவிக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் பிரபு கடந்த 23-ந் தேதி மனைவியுடன் கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டார். மறுநாள் காலை பிரபுவின் தந்தை அம்மாசை பிரபுவை எழுப்புவதற்காக அவரது அறைக்கு வந்தார். அப்போது பிரபு அவரது அறையில் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவிக்கு அழைத்து பிரபுவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர் பிரபு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் பிரபுவின் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். பிரபு எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை. இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்! தீவிரவாதிகளின் படங்கள் வெளியீடு!!