இலங்கை தொடர் குண்டு வெடிப்பு - பலியானோர் எண்ணிக்கையில் குளறுபடி

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 253 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பலியானோரின் உடல்கள் சின்னாபின்னமாக கிடந்ததால் முதலில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட்டு 359 என தவறுதலாக அறிவிக்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.

ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிறன்று இலங்கை தலைநகர் கொழும்புவின் புறநகர் பகுதியில் பயங்கரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பு நடத்தினர்.கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 359 என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் உண்மையில் இறந்தது 253 பேர் தான் என்று இப்போது இலங்கை சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது. குண்டு வெடிப்பில் பலியானோரின் உடல்கள் சின்னாபின்னமாகிக் கிடந்ததால் கணக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட்டுவிட்டது. தற்போது டிஎன்ஏ உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டதில் இந்த குளறுபடி கண்டுபிடிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 253 பேர் தான் என்று அறிவித்துள்ளது இலங்கை சுகாதாரத்துறை.

நல்லவர்களாக நடித்து குண்டு போட்ட செல்வந்தர் குடும்பம்!!
More News >>