இந்த வேலையை செய்யாதீர்கள் - அருண் ஜெட்லிக்கு எச்சரிக்கை செய்த சுப்பிரமணியன் சுவாமி

இந்தியாவில் விமான சேவையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையால் கடந்த புதன்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் பத்து போயிங் 777-300ERs ரக விமானங்களும், ஆறு ஏர்பஸ் A330s ரக விமானங்களும் என 16 பெரிய விமானங்கள் உள்ளன. இதனை தற்போது ஏலத்தில் விட முயற்சி நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்த வீழ்ச்சிக்கு இவர்கள் தான் காரணம் என மத்திய அமைச்சர்கள் இருவரை குற்றம் சாட்டியுள்ளர் எம்பியும் பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், "ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லியும், சிவில் விமான போக்குவரத்து ராஜாங்க மந்திரி ஜெயந்த் சின்காவும் தான் காரணம். அவர்கள் இருவரும் தங்கள் பதவிகளை தவறாக பயன்படுத்தி பாரதீய ஜனதா கட்சியின் புகழுக்கு களங்கம் விளைவித்து வருகின்றனர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு பார்சல் செய்து கொடுக்கும் வேலையை செய்ய வேண்டாம் என மோடி எடுத்து கூற வேண்டும்" எனக் கூறியுள்ளதுடன் இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களைக் கைவிடாமல் 500 பேரைக் காப்பாற்றியது ஸ்பைஸ் ஜெட்!
More News >>