இதற்காக தான் காத்திருக்கிறோம் - உலகக்கோப்பை குறித்து பேசும் இயான் மோர்கன்

உலகக்கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் அதற்காக தயாரகி வருகின்றன.

இந்த உலகக்கோப்பையை பொறுத்தவரை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கு காரணம் இந்திய அணியின் சமீபத்திய பார்ம் மட்டுமில்லாமல் இங்கிலாந்தில் உலகக்கோப்பை போட்டிகள் நடப்பதும் தான். கிரிக்கெட்டை தாங்கள் தான் கண்டுபிடித்தோம் எனக் கூறும் இங்கிலாந்து இதுவரை ஒரு முறை கூட உலகக்கோப்பையை உச்சி முகர்ந்தத்தில்லை.

அந்த சோகத்தை போக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்நிலையில் இது குறித்து இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பேசியுள்ளார். அதில், "நிச்சயம் இந்த முறை என்களுக்கான வாய்ப்பு நிறைய உள்ளது. இதற்காக தான் நாங்கள் காத்துகொண்டிருக்கிறோம். இனிமேலும் இதற்காக காத்திருக்க முடியாது. உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காகவே ஒரு அணியாக எங்களை வலுவாக கட்டமைத்துள்ளோம். எங்களுக்கு பெரிய போட்டியாக இந்தியா இருக்கும். ஒவ்வொரு முறையும் இந்தியாவில் நாங்கள் விளையாடும் போது நாங்கள் வெளிநாடு அணியாகவே பார்க்கபடுகிறோம். ஆனால் இந்திய அப்படி அல்ல. அவர்கள் எங்கு சென்றாலும் அது சொந்த மைதானமாகவே பார்க்கப்படுகிறது. இந்தியா மிகப்பெரிய அணி. அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாட்டின் அணி. அவர்களுக்கு எப்போதும் மிகப்பெரிய ரசிகர்கள் ஆதரவு இருக்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிரான தொடர்கள் கஷ்டமாகவே இருந்தது. ஆனால் இப்போது இரண்டு அணிகளும் சமமாகவே உள்ளது. சமமாக உள்ள அணிகள் மோதயிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" எனக் கூறியுள்ளார்.

என்னால முடியல... மிஸ் பண்ணுறேன்... - சுனில் நரேன் வருத்தம்
More News >>