வைரலாகும் கரடிக்கு உணவூட்டும் வீடியோ பஞ்சாயத்து வைத்த பீட்டா!
பிரபல இன்ஸ்டாகிராம் மாடலான டேன் பில்செரியன், தனது பார்ட்டியில் கரடி ஒன்றுக்கு தனது கையால் உணவு ஊட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த விலங்குகள் நல அமைப்பான பீட்டா, டேன் பில்செரியனின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து புகாரும் அளித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் மாடலான டேன் பில்செரியன், பணம், பெண்கள் மற்றும் பார்ட்டி என பிளேபாய் வாழ்க்கை வாழ்ந்து வருபவர். அவருடைய குறும்பத்தன சேட்டைகளால் இன்ஸ்டாகிராமில் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் அவரது வீட்டில் நடத்தப்பட்ட ஒரு பார்ட்டியின் போது, கரடி ஒன்றுக்கு தனது கையால் உணவு ஊட்டும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட அது ஒரு கோடிக்கும் மேலான பார்வைகளை பெற்று படு வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ வைரலான செய்தி அறிந்த பீட்டா நிறுவனம், விலங்குகளை டேன் சித்ரவதை செய்வதாக குற்றச்சாட்டை முன் வைத்து அவருக்கு அந்த அமைப்பின் சார்பாக கண்டனத்தையும் கலிபோர்னியாவில் உள்ள மீன் மற்றும் உயிரின பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் புகாரும் அளித்துள்ளது.
ஆனால், இதற்கு பதிலளித்துள்ள டேன், தான் எந்த மிருகத்தையும் சித்ரவதை செய்யவில்லை என்றும் தானும் விலங்கு நல ஆர்வலர் தான் என விளக்கமளித்துள்ளார்.
முடங்கி மீண்ட ஃபேஸ்புக்