பைக் திருடனை மடக்கி பிடித்த பொதுமக்கள்: 12 வாகனங்கள் பறிமுதல்
ஏழு கிணறு பகுதியில் பைக் திருடனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். போலீசார் அவனிடமிருந்து 12 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
சவுகார்பேட்டை, கொண்டித்தோப்பு, ஏழு கிணறு, பாரிமுனை பகுதிகளில் இருசக்கர வாகனம் அடிக்கடி திருட்டு போவதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினார்கள். இருப்பினும் அந்த பகுதியில் பைக் திருட்டு சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருந்தது.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு ஏழுகிணறு பகுதியில் திருடன் ஒருவன் மோட்டார் சைக்கிளை திருட முயற்சி செய்த போது மக்கள் பார்த்து விட்டனர். இதனையடுத்து தப்பிக்க முயன்ற திருடனை அந்த பகுதி மக்கள் அவரை அடித்து உதைத்து மடக்கிப் பிடித்தனர். பின் அந்த திருடனை ஏழு கிணறு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அவனுடைய பெயர் நசீர் (48) என்பதும் சாலிகிராமத்தை சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. மேலும் ஏற்கனவே சென்னை நகரில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள், மொபட், ஸ்கூட்டி போன்ற இருசக்கர வாகனங்களை திருடியதும் பல திருட்டு வழக்குகள் அவர்மீது இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து நாசரை ஏழு கிணறு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய விவகாரத்தில் 5 பேர் கைது