ஓடும் ரயிலில் ரயில்வே அதிகாரியின் மனைவியிடம் துணிகர கொள்ளை
விழுப்புரத்தில், ஓடும் ரயிலில் மயக்க மருந்து தெளித்து, ரயில்வே அதிகாரி மனைவியிடம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். ரயில் பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றி வருபவர் அஹ்மத் அலிகான். இவர் கொளத்தூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அஹ்மத் அலிகான், குடும்பத்துடன் திருநெல்வேலி சென்றுவிட்டு, நேற்று முன்தினம் கன்னியாகுமரி விரைவு ரயிலில் சென்னைக்கு திரும்பினார்.
அந்த ரயிலில் ஏ.சி. பெட்டியில் குடும்பத்துடன் அவர் பயணித்து வந்தார். நேற்று காலை விழுப்புரம் அருகே ரயில் வந்தபோது, அவரது மனைவி சையத் அலி பாத்திமா கண் விழித்து தனது கைப்பையை பார்த்தபோது கடும் அதிர்ச்சி அடைந்தார். அந்த கைப்பையில் இருந்த 23 சவரன் நகை, 15 ஆயிரம் ரூபாய் மாயமாகி இருந்தது.
இதனையடுத்து அவர் விழுப்புரம் ரயில்வே காவல்நிலைய போலீசில் புகார் அளித்தார். மேலும் மயக்க மருந்து தெளித்து மர்ம நபர்கள் கொள்ளை அடித்திருக்கலாம் என சந்தேக படுவதாகவும் அவர் போலீசிடம் கூறினார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டில் திருடர்கள் கைவரிசை: 50 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் கொள்ளை