மீண்டும் முதலிடத்தை பிடிக்க கத்ரீனா கைஃப் தீவிரம் பி.டி. உஷா பயோபிக்கில் நடிக்க திட்டம்!
இந்தியாவின் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் பயோபிக்கில் பிரியங்கா சோப்ராவுக்கு பதில் கத்ரீனா கைஃப் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்த கத்ரீனா கைஃப் சமீப காலமாக அந்த இடத்தை தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, ஆலியா பாட் போன்ற நடிகைகளின் வசம் செல்ல விட்டு விட்டார்.
இந்நிலையில், மீண்டும் பாலிவுட்டின் முன்னணி நடிகை அந்தஸ்த்தை பிடிக்க போராடி வருகிறார் கத்ரீனா கைஃப். ஆமீர்கானுடன் அவர் நடித்த தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் மற்றும் ஷாரூக்கானுடன் அவர் நடித்த ஜீரோ படங்கள் படு தோல்வியடைந்துள்ளன.
இந்நிலையில், வரும் ஈகைத் திருநாளில் வெளியாகும் சல்மான் கானின் பாரத் படத்தை பெரிதும் நம்பியுள்ளார். அந்த படமும் தன்னை ஏமாற்றினால், என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்த கத்ரீனா கைஃப், தற்போது பயோபிக் படத்தில் நடித்தால் தான் டாப்புக்கு வர முடியும் என்ற ஃபார்முலாவை முயற்சித்து பார்க்க முடிவு செய்துள்ளார்.
பி.டி. உஷாவின் பயோபிக் படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ரேவதி வர்மா, அந்த படத்தில் பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க முயற்சி செய்தார். முன்னதாக மேரி கோம் பயோபிக்கில் பிரியங்கா சோப்ரா நடித்திருந்த நிலையில், இந்த படத்தையும் அவரை வைத்து எடுத்தால் வெற்றி பெறலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
அதனால், அந்த படத்தின் கதையை கத்ரீனா கைஃப் இடம் ரேவதி வர்மா, கூற கத்ரீனா கைஃப் உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சூர்யவன்ஷி படத்தை முடித்த கையுடன் அதிகாரப்பூர்வமாக பி.டி. உஷா பயோபிக்கில் நடிப்பது குறித்து கத்ரீனா கைஃப் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றுடன் 70 நாட்கள்…! முகிலன் எங்கே...? வருவார் என்ற நம்பிக்கையில் மனைவி பூங்கொடி!