ராகுல் காந்தி சென்ற விமானத்தின் எஞ்சின் கோளாறு - டிவிட்டரில் வீடியோ வெளியிட்டு தாமதத்திற்கு மன்னிப்பு கேட்ட ராகுல்

தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியிலிருந்து பாட்னாவுக்கு சென்ற விமானத்தில் திடீரென எஞ்சின் கோளாறு ஏற்பட்டது. இதனால் மீண்டும் டெல்லி திரும்பிய ராகுல், பொதுக் கூட்டத்தில் பங்கேற்க தாமதமானதற்கு மன்னிப்பு கோருகிறேன் என்று கூறி விமானத்தில் அமர்ந்தபடி காட்சியளிக்கும் வீடியோ ஒன்றை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் ராகுல் காந்தி தனி விமானத்தில் நாடு முழுவதும் சுற்றி வருகிறார். இன்று பீகார் மாநிலம் சமஸ்திபூர், ஒடிசாவின் பாலசோர், மகாராஷ்டிராவின் சங்கம்னர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப் பட்டிருந்தது. இதற்காக இன்று காலை டெல்லியிலிருந்து தனி விமானத்தில் பாட்னா புறப்பட்டார். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் எஞ்சின் கோளாறு காரணமாக மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.

விமான எஞ்சின் கோளாறு குறித்த தகவலை ராகுல் காந்தியே டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் தான் அமர்ந்து இருக்கும் காட்சிகளுடனான வீடியோவை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு மன்னிப்பு கோருவதாகவும் பதிவிட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் ரயில் நிலைய கேண்டீனில் பயங்கர தீ விபத்து
More News >>