ஆட்சி கவிழ்ந்து விட்டால்..? அதற்காகத்தான்..! அதிமுக கூட்டணியை விளாசிய ஈஸ்வரன்

அதிமுக-பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழக மக்களின் நலனுக்காக இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் ஈஸ்வரன்.

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதி இடைத்தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், மீதம் உள்ள நான்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெறுகிறது. இதனால், தேர்தலுக்கான ஆயத்த பணிகளை பிரதான அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. இடைத்தேர்தல் பிரசாரக் களமும் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், சூலூர் இடைத்தேர்தல் தொடர்பான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், ‘தமிழகத்தில் வசூலாகின்ற ஜிஎஸ்டி வரியை திரும்பப்பெற முடியாத நிலையில் தான் தமிழக அரசு உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு என்ன சொல்கிறதோ, அதனை அப்படியே செய்து வருகின்றனர் அதிமுக-வினர். இப்படிப்பட்ட ஆட்சியாளர்கள் தமிழகத்திற்கு என்ன பெற்றுத்தர போகிறார்கள். அழிவில் உள்ள ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசை எதிர்த்து ஒரு கேள்விகூட கேட்க முடியவில்லை தமிழக ஆட்சியாளர்களால்.

தமிழக மக்களின் நலனுக்காகவா பாஜகவுடன் கூட்டணி அமைத்தது அதிமுக..?. ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்தார்கள். சூலூர் சட்டமன்றத் தொகுதியில் 3 ஆண்டுகள் எம்.எல்.ஏ கனகராஜ் என்ன செய்தார். இங்கு,  விசைத்தறி தொழில் தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெறும். தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்’ என கொந்தளிப்பாகப் பேசினார்.

பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசின் படு தோல்வி...! பெரம்பலூரில் எதிரொலித்திருக்கிறது...! - எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
More News >>