ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் உண்மை கண்டறிய அதிரடி நடவடிக்கை!
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரம் குறித்து விசாரணை செய்ய, ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக
நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் தெரிவித்தார்.
சமீபத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த குழந்தை பாக்கியம் இல்லாத ஒருவரிடம் ஓய்வு பெற்ற நர்ஸ் பேசிய ஆடியோ வாட்ஸ்-அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் அந்த நர்ஸ், நான் கடந்த 30 ஆண்டுகளாக குழந்தைகளை வாங்கி கொடுத்து வருகிறேன். இதனால் நர்ஸ் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன்.
முன் பணமாக ரூ.30 ஆயிரம் கொடுத்தால் தான் குழந்தையை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.
குழந்தை வந்ததும் நேரில் வந்து பார்த்து எடுத்துச் செல்லலாம். குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்றாலும் ரூ.70 ஆயிரம் கொடுத்து வாங்கி கொடுக்கிறேன் என அவர் கூறுகிறார்.
இந்த ஆடியோ பேச்சு ராசிபுரம் பகுதியில் வைரலாக பரவி வருகிறது.
இதனையடுத்து ராசிபுரம் மகளிர் போலீசார் ஓய்வு பெற்ற நர்சை கைது செய்து அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளை வாங்கி, விற்றது உண்மையா? அல்லது தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறீர்களா? என்பது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக
நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் தெரிவித்தார்.
மேலும், ராசிபுரம் நகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் பிறந்த 4800 குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
கொல்லிமலையில் வீட்டில் பிரசவம் பார்த்த குழந்தைகளின் விவரங்களையும், தத்து கொடுத்த ஆவணங்களை சரிபார்க்கவும் 5 பேர் கொண்ட 2 குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நான் அரசியலுக்கு வந்தா.. என் மனைவி என்னை விட்டுட்டு போயிடுவாங்க – ரகுராம் ராஜன் கலகல பேட்டி!