இன்றுடன் 70 நாட்கள்hellip! முகிலன் எங்கே...? வருவார் என்ற நம்பிக்கையில் மனைவி பூங்கொடி!
முகிலன், தமிழ்நாடு அறிந்த சூழலியல் செயற்பாட்டாளர். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர், அரசுக்கு எதிராகவும், ஆற்று மணல் கொல்லைக்கு எதிராகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர். வெளியில் இருந்த நாட்களை விட முகிலன் சிறையில் இருந்த நாட்களே அதிகம். கடந்த பிப்ரவரி 15ம் தேதியன்று செய்தியாளர்களை சந்தித்த முகிலன், அதன் பிறகு காணவில்லை. முகிலன் எங்கே என்ற கேள்வி எழுந்தது.
முகிலன் காணாமல் போனதையடுத்து, மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையில், ‘முகிலன் எங்கே’ #WhereIsMugilan என்ற ஹேஷ்டேக் மூலம் இணையதளவாசிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர். இதனால், முகிலனை தேடும் பனி சற்று துரிதமானது. முகிலன் வழக்கு சிபிசஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. காற்றின் வேகம் எப்போதும் ஒரே பக்கம் வீசாது அல்லவா..? அதனால், மக்களவை தேர்தல், ஐபிஎல் போட்டி உள்ளிட்ட அலைகள் எழும்பியதால், முகிலனை தேடும் பணி எந்தநிலையில் உள்ளது என்பதை கண்டுகொள்ள மறந்துவிட்டோம். முகிலன் காணாமல் போய் இன்றுடன் 70 நாட்கள் ஆகின்றன. ஆனால், விசாரணை எந்த அளவில் உள்ளது என்பது தெரியாது.
இந்நிலையில், முகிலனின் மனைவி பூங்கொடி, பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘என் கணவரைப் பற்றி போலீஸாரிடம் விசாரிக்கும் போதெல்லாம், தேடிக்கொண்டு இருக்கிறோம் என்கிறார்களே, தவிர விசாரணையில் முன்னேற்றம் இல்லை. அவரை கடத்திக் கொண்டு எங்கே வைத்திருக்கிறார்கள் என்பது சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு தெரியும். ஸ்டெர்லைட் நிறுவனத்தை சேர்ந்தவங்களாத்தான் அவரை கத்திக்கொண்டு சென்றிருப்பார்கள். சிலர், என்கணவரை ஏதாவது செய்திருப்பார்கள் என்கிறார்கள். இந்நாள் வரையா அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள். அவர், நிச்சயம் வருவார். நம்பிக்கை உள்ளது’ என்றார்.
மேலும், முகிலன் வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விரைந்து நடந்த வேண்டும், அவரை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர். நாமும் அதே கோரிக்கையை முன்வைப்போம்.
மீண்டும் முதலிடத்தை பிடிக்க கத்ரீனா கைஃப் தீவிரம்; பி.டி. உஷா பயோபிக்கில் நடிக்க திட்டம்!