அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டில் திருடர்கள் கைவரிசை: 50 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் கொள்ளை
தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனவாசன் மகன் வீட்டில் 50 பவுன் நகைகள், ரூ.4 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அமைச்சர்களில் மனதில் பட்டதை பேசுபவர்களில் ஒருவர் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். சில சமயங்களில் அவர் வாய் தவறி பேசும் பேச்சுக்கள், சிரிக்க மறந்த மக்களையும் சிரிக்க வைத்து விடும். மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் நல்ல வேலை கொடுப்பவர் திண்டுக்கல் சீனிவாசன்தான். அவரது மகன் வெங்கடேசன்.திண்டுக்கல் மெண்டோசா காலனியில் வெங்கடேசன் வசித்து வருகிறார். வெங்கடேசன் அண்மையில் வெளியூர் சென்று இருந்தார். அந்த சமயம் அவரது வீட்டில் பீரோவில் இருந்த 50 பவுன் தங்கம் நகைகளும், ரூ.4 லட்சம் ரொக்க பணமும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அமைச்சர் மகன் வீட்டிலேயே கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதால் அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சட்டம் ஒழுங்கு விஷயத்தில் தமிழக அரசுக்கு இது பெரும் பின்னைடைவாக கருதப்படுகிறது.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: தமிழக வீராங்கனை சாதனை! -இந்தியாவுக்கு முதல் தங்கம்