விசாகப்பட்டினத்தில் இனி பெண்களை பார்த்து விசிலடிக்கவும் பயப்படணும் அதிரடியாக களமிறங்கிய ஸ்த்ரீ சக்தி போலீஸ் குழு!
பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் பெருகி வரும் சூழலில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது காவல்துறையின் மிகப்பெரிய கடமையாக மாறியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் 35பெண் போலீசார் கொண்ட ’ஸ்த்ரீ சக்தி’ என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு 5 கார்கள் மற்றும் 20 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 25 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரி மற்றும் பெண்கள் அதிகமாக பணிபுரியும் இடங்களில் இந்த ஸ்த்ரீ சக்தி அமைப்பு ரோந்து செய்யும். ஈவ் டீஸிங் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதே இந்த அமைப்பின் முதன்மை கடமையாக விளங்கும் என ஆந்திர மாநில டிஜிபி ஏபி தாக்கூர் நேற்று தெரிவித்தார்.
இந்த ஸ்த்ரீ சக்தி குழுவில் உள்ள அனைத்து பெண் போலீசாருக்கும் கார் ஓட்டும் பயிற்சி, நீச்சல் பயிற்சி, கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் மற்றும் தற்காப்பு பயிற்சி வகுப்புகள் ஒரு மாத காலத்திற்கு வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் டிஜிபி தாக்கூர் கூறினார்.
இந்த சக்தி போலீசார் நீல நிற சட்டை மற்றும் காக்கி பேன்ட் சீருடை அணிந்து பணி புரிவார்கள்.
பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசின் படு தோல்வி...! பெரம்பலூரில் எதிரொலித்திருக்கிறது...! - எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்