மாட்டின் சிறுநீரால் குணமாகவில்லைஅறுவை சிகிச்சையால் குணமானது! சாத்வியின் புற்றுநோய் சர்ச்சை
பாஜக சார்பில் போபால் தொகுதியில் போட்டியிடும் சாத்வி பிரக்யா அடுத்தடுத்த சர்ச்சைகளைக் கிளப்பி, அதில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
மாலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட சாத்வி பிரக்யா, வழக்கில் இருந்து விடுதலை பெற்றதையடுத்து பாஜகவில் இணைந்தார். இணைந்த கையோடு, அவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, சாத்வி எனக் கூறிக்கொண்டு தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் பிரக்யா. இதனால், உ.பி., பாஜக வட்டாரம் இவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளது.
முதலில், தான் சாபமிட்டதால்தான் மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே உயிரிழந்ததாக சாத்வி கூறியது சர்ச்சையானது. பின் அதற்காக மன்னிப்பு கேட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தேன். மாட்டு சிறுநீரை அருந்தியதன் மூலம் என் புற்றுநோயை நானே குணப்படுத்திக் கொண்டேன்’ என்று கூறி திகைக்கச் செய்தார்.
இவ்வாறு, சாத்வி கூறியதை அடுத்து, ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மருத்துவர் ராஜ்புத் சத்வியின் புற்றுநோய் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘2008ல் ஆரம்பக்கட்ட புற்றுநோய் கண்டறியப்பட்டது. அதற்கா, 2012ல் முதல் அறுவைச் சிகிச்சை, பிறகு இரண்டாவது அறுவைச் சிகிச்சை போபாலில் நடத்தப்பட்டதாகவும், மூன்றாவது அறுவைச்சிகிச்சை கடந்த 2017ம் ஆண்டு நடத்தப்பட்டு அவரது மார்பகங்கள் நீக்கப்பட்டதாக’ தெரிவித்துள்ளார்.
‘முஸ்லிம் பெண்கள் முகத்தை மூட வேண்டாம்’ இலங்கை உலமா அமைப்பு வலியுறுத்தல்!