பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 9.97 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளார்கள். தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்தப் பணி, கடந்த 16ம் தேதியில் முடிவடைந்தது. தற்போது, மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதோடு, மாணவர்களின் மதிப்பெண்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 19-ம் தேதி வெளியானது. இதை தொடர்ந்து, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒன்பது லட்சத்து, 97 ஆயிரம் பேர் தேர்வு எழுதியுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை இயக்கம் தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 29-ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும். மேலும், மாணவர்கள் தாங்கள் பதிவு செய்த அலைப்பேசி எண் மூலம் தேர்வு முடிவுகளைக் குறுஞ்செய்தியாகப் பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதிமுக கொறடா உள்நோக்கத்துடன் சுமத்தும் புகார்! –புலம்பும் எம்.எல்.ஏ-க்கள்