சுவையான கீரை இட்லி மிளகாய்ப்பொடி ரெசிபி
கீரையைக் கொண்டு இட்லி மிளகாய்ப்பொடி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள் :
பொன்னாங்கண்ணிக்கீரை இலைகள்- கால் கப்
உளுந்து - அரை கப்
கடலைப்பருப்பு - அரை கப்
காய்ந்த மிளகாய் -10
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில், கீரையை நன்றாக தண்ணீரில் அலசி துணியில் துடைத்து வெயிலில் காய வைக்கவும்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காயவைத்து, கீரையை மிதமான தீயில் மொறுமொறுப்பாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதே வாணலியில், உளுந்து, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை எண்ணெய் ஊற்றி ஒவ்வொன்றாக வறுத்து எடுத்து ஆறவைக்கவும்.
பிறகு, வறுத்த கீரையுடன் இவற்றை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
அவ்ளோ தான் சுலபமான மற்றும் சுவையான கீரை இட்லி மிளகாய்ப்பொடி ரெடி!