சத்து நிறைந்த பாலக்கீரை ஸ்மூத்தி
வீட்டிலேயே செய்யக்கூடிய பாலக்கீரை ஸ்மூத்தி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்...
தேவையான பொருட்கள்:
பாலக் கீரை இலைகள் - ஒரு கை பிடி
நன்றாக பழுத்த பச்சை வாழைப்பழம் - 1
ஆப்பிள்- 1/2 ( தோல் சீவியது)
செய்முறை:
முதலில், கீரையை கழுவி சுத்தம் செய்யவும்.
பின், பச்சை வாழைபழத்தையும், ஆப்பிளையும், கீரையையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஒரு கண்ணாடி தம்பளரில் பரிமாறவும்.
அவ்ளோதான்.. சத்தான பாலக் கீரை ஸ்மூத்தி ரெடி..!