பொன்னமராவதி கலவரம் விவகாரம்: அவதூறு ஆடியோ வெளியிட்ட நபர்கள் அதிரடி கைது

பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான ஆடியோவை வெளியிட்ட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் தங்கள் சமூககத்தை மாற்று சமூகத்தை சோ்ந்த சிலர் இழிவாக பேசி ஆடியோ வெளியிட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதேசமயம் அந்த அவதூறு ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இந்த சூழ்நிலையில், காவல்துறையினர் அந்த ஆடியோவை வெளியிட்ட நபரை கைது செய்யவில்லை என்று கூறி காவல்துறை வாகனங்கள் மற்றும் பொது மக்களின் வாகனங்களை சிலர் அடித்து நொறுக்கினர். மேலும் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையில் மரங்களை வெட்டி போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக பொன்னமராவதி உள்பட 30 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிலவரம் கட்டுக்குள் வந்ததையடுத்து 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

இந்தநிலையில், பொன்னமராவதி கலவரத்துக்குக் காரணமான வீடியோவை வாட்ஸ்அப்-ல் வெளியிட்ட இருவரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வகுமார், வசந்த் ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சிங்கப்பூரில் பணியாற்றிய செல்வவகுமாரை சென்னை வரவழைத்து போலீசார் கைது செய்து குறிப்பிடத்தக்கது.

அடுத்த குறி இஸ்லாமிய மக்களா..? இலங்கையில் ஊடுருவும் ஸ்லீப்பர் செல்ஸ்!
More News >>