இலங்கை தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோயில் பகுதியில் சுற்றி திரிந்த 12 பேர் கைது
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திரிந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
அண்டை நாடான இலங்கையில் கடந்த சில நாட்களாக தினம் தினம் குண்டு வெடிப்பு நிகழ்ந்து வருகிறது. நியூசிலாந்தில் மசூதியில் நடைபெற்ற தாக்குதலுக்கு பழிக்கு பழியாக இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்துவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் கூறினர். இதன் எதிரொலியாக இந்தியாவில் குறிப்பாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திருமலையில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருமலையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றி திரிந்த 12 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை திருப்பதி காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
ரயிலில் கடத்தப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல்