தினகரனுக்கு 22 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு

தினகரனுக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. இதனால், எடப்பாடி பழனிச்சாமியின் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது, எடச்சாமி பழனிச்சாமியின் அரசு தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது. ஜெயலலிதா இறந்த பின்னர் ஏற்பட்ட உள்கட்சி பூசல் காரணமாக ஆட்சி ஸ்திரத்தன்மை இல்லாத நிலை இருந்து வருகிறது. அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் ஆதரவு எம்..எல்.ஏக்கள் 20 பேர் புதுச்சேரியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். தற்போது, அவருக்கு மேலும் இரு எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.

தற்போதையை நிலையில் , சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி அரசுக்கு 117 எம்.எல்.ஏக்கள் தேவை. எடப்பாடி வசம் 109 பேர் மட்டுமே உள்ளனர். டி.டி.வி. பக்கம் 22 பேர் உள்ளனர். இதனால்,கவர்னர் பெரும்பான்மையை நிரூபிக்க கேட்டுக் கொண்டால் தமிழக அரசியலில் குழப்பம் மேலும் அதிகரிக்கும். இதற்கிடைய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தமிழகத்துக்கு வருகை தந்துள்ளது எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

More News >>