மீண்டும் ஸ்ருதி ஹாசன் நடிக்க வர இதுதான் காரணமா?

நடிகை ஸ்ருதிஹாசனுடனான காதலுக்கு குட்பை சொல்லி உள்ளார் இத்தாலி நாட்டை சேர்ந்த மைக்கேல் கார்சலே. இந்த காதல் முறிவு தான் மீண்டும் சினிமா பக்கம் ஸ்ருதிஹாசன் திரும்ப காரணம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் கடந்த இரண்டு ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். ஆனால், தற்போது மீண்டும் நடிகர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் இணைந்துள்ளார். மேலும், நிறைய படங்களில் கமீட் ஆகி வருகிறார்.

இதற்கு என்ன காரணம் என தெரியாமல் குழம்பி வந்த கோடம்பாக்கத்துக்கு புதிதாக ஒரு செய்தி கிடைத்துள்ளது. நடிகை ஸ்ருதி ஹாசனுக்கும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மைக்கேல் கார்சலேவுக்கும் காதல் மலர்ந்திருந்தது. ஆனால், தற்போது ஸ்ருதி ஹாசனும் நானும் வேறு வேறு பாதைகளில் பயணிக்க வேண்டியிருப்பதால், அவரை பிரேக் அப் செய்கிறேன் என மைக்கேல் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள கருத்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்த காதல் முறிவு தான் ஸ்ருதிஹாசன் மீண்டும் சினிமா பக்கம் திரும்ப காரணமா? என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றன.

 

More News >>