மாமியார் வீட்டு முன் தீக்குளிக்க முயன்ற டிரைவரால் பரபரப்பு

ஈரோட்டில் மாமியார் வீட்டு முன் தீக்குளிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மோசிக்கீரனார் வீதியைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி. அவர்களுக்கு நிர்மலா என்ற மகளும் சிவகுமார் என்ற மகனும் உள்ளனர்.

நிர்மலாவுக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த செல்லதுரைக்கும் இடையே பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. பின்னர் செல்ல துரையும் ,நிர்மலாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர். செல்லத்துரை லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் செல்லத்துரைக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான செய்தி நிர்மலாவுக்கு தெரியவந்தது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கணவருடன் கோபித்துக்கொண்டு நிர்மலா ஈரோட்டில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

இந்நிலையில் செல்லத்துரை நேற்று ஈரோட்டுக்கு வந்தார். மாமியார் வீட்டுக்கு சென்ற அவர் மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் நிர்மலா கணவருடன் செல்ல மறுத்துவிட்டார். அதன் பின்னர் செல்லதுரை அங்கிருந்து சென்று விட்டார்.

பின்னர் மீண்டும் மாலை மாமியார் வீட்டுக்குச் செல்லத்துரை வந்தார். தனது மனைவியுடன் தண்ணீர் சேர்த்து வைக்குமாறு மீண்டும் கூறினார். அப்போது வீட்டில் விஜயலட்சுமியின் தாய் மல்லிகா மட்டும் இருந்தார்.

திடீரென செல்லதுரை தான் கொண்டுவந்த பெட்ரோல் கேனை தன் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து செல்லத்துரையை தடுத்தனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்லத்துரையை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் லாரி டிரைவர் செல்லத்துரை மீது ஈரோடு டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் செல்லத்துரை ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

காணாமல் போன பெட்ரோல் பங்க் ஊழியர் முட்புதரில் பிணமாக கண்டெடுப்பு காணாமல் போன குன்றத்தூர் பெட்ரோல் பங்க் ஊழியர் முட்புதரில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
More News >>