நார்ச்சத்து நிறைந்த வாழைப்பூ பச்சடி

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை வாழைப்பூ சரிசெய்யும். வாழைப்பூ பச்சடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வாழைப்பூ - 1தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டிசீரகம் - 1 தேக்கரண்டிபச்சை மிளகாய் - 1தயிர் - 100 மி.லி.உப்பு - தேவைக்கு

செய்முறை :

* வாழைப்பூவை பொடியாக நறுக்கி, சிறிது நீர் தெளித்து வாணலியில் கொட்டி, மூடிவைத்து சிறுதீயில் வேகவையுங்கள். வெந்ததும் இறக்கி, ஆறவிடுங்கள்.

* தேங்காய் துருவல், சீரகம், பச்சைமிளகாயை மிக்சியில் அரைக்கவும்.

* அத்துடன் வாழைப்பூவையும் கலந்து ஒரு சுற்று மட்டும் ஓடவிட்டு இறக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, உப்பு, தயிர் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறுங்கள்.

* வாழைப்பூ உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மையுள்ளது. அதனால் ரத்த மூலம் மற்றும் மாதவிடாய் காலத்தில் உண்டாகும் அதிக குருதி போக்கிற்கு இது சிறந்த உணவு. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலும் நீங்கும்.

More News >>