கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.10 லட்சம் பரிசு! - மு.க ஸ்டாலின் அறிவிப்பு

‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்துவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த 23 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர்  ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, முதல் இடம் பிடித்து  இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். தமிழகமே உணர்ச்சி பொங்கப் பாராட்டியது. தாயகம் திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்ப்பு மக்கள் சார்பில் வழங்கப்பட்டது. தமிழக அரசு கண்டுகொள்ள வில்லை என்ற புகார் ஒருசேர எழுந்து வருகிறது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கோமதி, சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கி இருந்தாலும், சாதனைக்குப் பொருளாதாரம் ஒரு தடைக்கல் இல்லை என்று நிரூபித்து உள்ளார் கோமதி.

இந்நிலையில், ஆசிய தடகள போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற கோமதிக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்குவதாகத் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதோடு, வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் ஆரோக்கியராஜீக்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில், தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பாக ரூ.5 லட்சம்  வழங்கப்படுவதாகத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, தனது வெற்றி குறித்து பேசிய கோமதி மாரிமுத்து, 'தமிழக அரசும்; மத்திய அரசும் உதவினால் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறுவேன்' என்று கூறினார். விளையாட்டுத்துறையில் சாதனை படைக்கும் வீரர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய உதவிகளை மாநில அரசு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர் ஆர்வலர்கள்.

கிழிந்த 'ஷூ' வுடன் ஓடினேன்...! சொந்தக் காசில் கத்தார் சென்றேன்...! தங்க மங்கை கோமதியின் குமுறல்
More News >>