அரசியலில் மாற்றம்..! தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துங்கள்..! ரஜினி மக்கள் மன்றம் உத்தரவு

சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தீவிரப்படுத்துங்கள் என நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிடிவி தினகரனுக்கு ஆதரவான எம்.எல்.ஏ-க்களை அதிரடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும்; அது தொடர்பாக அதிமுக-வின் நடவடிக்கை எனத் தமிழக அரசியல் களம் நேற்றில் இருந்து அதீத பரபரப்பாகக் காணப்படுகிறது. இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது, வெளியான இந்த அறிக்கை ரஜினி ரசிகர்கள் மத்தியில் சூறாவளி போல் சுழன்று வருகிறது.

‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்; சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்’ என ரஜினி அளித்த பேட்டிக்குப் பிறகு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக வெளிவந்துள்ள  உத்தரவு அறிக்கையை வைத்து பார்கையில் ரஜினி சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருவதாக தெரிகிறது.

வேலூர் ரஜினி மக்கள் மன்றம், மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி, இணைச் செயலாளர் நீதி என்கிற அருணாசலம் இருவரின் பெயரில் இன்று வெளியான அறிக்கையில், ‘’சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார் என்று தலைவர் அறிவித்திருக்கிறார். அதற்கு ஏற்றவாறு, இதுவரை வேலூர் மாவட்டம் முழுவதிலும் தீவிரமாய் செயல்பட்டுவந்த அரசியல் கட்டமைப்பு பணிகளைத் தொடர்ந்து செய்து, விடுபட்ட வேலைகளை முழுமையாக முடிக்க வேண்டும். சந்திக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும், தலைவர் நிகழ்த்தப் போகும் அரசியல் மாற்றத்துக்கும் துணை நின்று வெற்றியை உறுதியாக்குவோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் மட்டுமின்றி அணைத்து மாவட்டங்களிலும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்தல் களப்பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர். முன்னதாக, ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ் மே 23க்கு பிறகு ரஜினியின் அரசியல் நிலைப்பாடு தெரியவரும் என்றார். இதை அனைத்தையும் பார்க்கும்போது வெகு விரைவில் ரஜினி விரைவில் தனது சட்டமன்றம் தேர்தல் போட்டி அறிவிப்பை வெளியிடுவார் எனத் தெரிகிறது.

தர்பார் ஷூட்டிங் ஸ்டில்ஸ்: ரஜினியை தொடர்ந்து நயன்தாரா லுக்கும் லீக்!
More News >>