சட்டென்று மாறியது...! புயல் தமிழகத்தை நெருங்காதாம் மக்களே...!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு குறைவு என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, புயலாக மாறி ஏப்ரல் 30ம் தேதி கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 1,210 கிமீ தொலைவில், 20.கிமீ வேகத்தில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும். அதோடு, புயலாக மாறி வட தமிழகம் - தெற்கு ஆந்திரா கடற்கரையை நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை தகவல் வெளியிட்டது. இதனால், தமிழகத்தை புயல் தாக்கும் என்ற அச்சத்தில் மக்கள் உறைந்தனர். இதனிடையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,சென்னை வானிலை மையம் இயக்குநர் பாலசந்திரன் ’ தென்கிழக்கு பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புதிய புயலுக்கு, வங்கதேசம்(bangladesh) தேர்வு செய்துள்ள ‘ஃபோனி’ என்ற பெயர்  சூட்டப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த புயல், சென்னையிலிருந்து, தென்கிழக்கே, 1,250 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், தீவிரமான புயலாக மாறும். வரும் 30ம் தேதியில் இந்த ஃபோனி புயலானது, தமிழ்நாட்டின் வடக்கு கடலோர பகுதி - ஆந்திர மாநிலத்தின் தெற்கு பகுதிகளை நோக்கி வரும். ஆனால், தற்போதைய நிலையைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் புயல் கரையைக் கடக்க வாய்ப்பு குறைவு’ என்று  தெரிவித்தார்.

இருப்பினும், புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் நிலையில் நாகை, காரைக்கால், கடலூர், பாம்பன் துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி, தூத்துக்குடி துறைமுகங்களிலும் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதோடு, கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய, நிலவரப்படி வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபோனி புயல் தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு குறைவு என்பதால், தமிழகத்தை புயல் தாக்காது.

1,500 கிலோ மீட்டர் தொலைவில்....வட தமிழகத்தை நெருங்கும் ஃபனி புயல்...!
More News >>