அமமுகவின் ஸ்லீப்பர் செல்கள்...அதிமுகவில் இருக்கிறார்கள்...! வெற்றிவேல் தடாலடி

அமமுகவின் ஸ்லீப்பர் செல்கள் அதிமுகவில் இருப்பதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் கூறியிருப்பது, அதிமுக வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக மூன்று எம்.எல்.ஏ-க்கள் செய்யல்பட்டதாக அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்ததோடு, அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு, பதில் அளித்துள்ள எம்.எல்.ஏ-க்கள், ‘கட்சிக்கு விரோதமாக தாங்கள் செயல்படவில்லை, சபாநாயகரிடம் இருந்து நோட்டீஸ் வந்தால் விளக்கம் அளிப்போம்’ என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் டிடிவி தினகரனை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், ‘அதிமுக-விற்கு சக்தியே இல்லை. அவர்கள் எப்படி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவார்கள்..? அதிமுக-வுக்குள் கோஷ்டி பூசல்கள் உள்ளன. எங்கள் நண்பர்கள் அதிமுகவில் ஸ்லீப்பர் செல்களாக இருக்கிறார்கள். எங்களுடன், தொடர்ந்து பேசி வருகிறார்கள். 22 சட்டமன்றத் தொகுதிகளில் அமமுக வெற்றி பெற்று வந்தோம் என்றால், அதிமுகவில் உள்ள டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ-க்களை உடன் சேர்த்துக் கொண்டு, ஆட்சியை பிடிப்போம். புகார் சுமத்தப்பட்ட மூன்று எம்.எல்.ஏ-க்களை தாண்டி அமைச்சர்களும் ஸ்லீப்பர் செல்களாக இருக்கிறார்கள்' என்றவர்.,

கட்சிக்குள் ஸ்லீப்பர் செல்கள் வைக்க கூடாது என்ற அக்ரிமெண்ட் இருக்கா...? உச்ச நீதிமன்றம் ஏற்கனவே, சட்ட பாதுகாப்பு கொடுத்துவிட்டது. ஆகையால், மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கும் சட்ட பாதுகாப்பு இருக்கிறது. அவர்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்டால் நீதிமன்றத்திற்கு செல்ல மாட்டோம். தேர்தலைத்தான் சிந்திப்போம். அந்த 3 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அமமுக 'சீட்' கொடுக்க தயார். அதற்கு, அவர்கள் சம்மதிக்க வேண்டும்’ என்று கூறினார்.

அரசியலில் மாற்றம்..! தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துங்கள்..! ரஜினி மக்கள் மன்றம் உத்தரவு
More News >>