தவ்ஹித் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் அமைப்புகளுக்கு தடை- இலங்கை அதிபர் சிறிசேனா பிரகடனம்

இலங்கையில் தேசிய தவ்ஹித் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகியவற்றை தடைசெய்யப்பட்ட அமைப்புக்களாக பிரகடனம் செய்து அந் நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஞாயிறன்று ஈஸ்டர் தினக் கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட பயங்கர தொடர் குண்டு வெடிப்பில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு தேசிய தெளஹீத் ஜமாத் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இதன் பின்னணியில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் சதித் திட்டமும் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, பல்வேறு அதிரடி முடிவுகளை அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா எடுத்து வருகிறார்.

உளவுத் துறை, பாதுகாப்பில் கோட்டை விட்ட அதிகாரிகள் பலரை அதிரடியாக நீக்க நடவடிக்கை எடுத்த சிறிசேனா, தற்போது இலங்கையில் செயல் பட்டு வரும் தேசிய தெளஹீத் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராகிம் என்ற இரு முஸ்லீம் அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகள் என்று பிரகடனம் செய்து அந்த அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவசர அறிவிப்பை அதிபர் சிறிசேனா வெளியிட்டுள்ளார்.

More News >>