சுவையான உருளை பருப்பு கிரேவி ரெசிபி

வீட்டிலேயே சுவையான பருப்பு கிரேவி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு- 2

பாசிப்பயிறு - 1/4 கப்

தக்காளி- 2

தனியாதூள் - 1/2 ஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்

கரம் மசாலா 1/4 ஸ்பூன்

சீரகத்தூள் -1/4 ஸ்பூன்

சோம்பு - 1/4 ஸ்பூன்

வெங்காயம் -1

பட்டை -1

கிராம்பு -2

எண்ணெய் - 2 ஸ்பூன்

மல்லி- தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில், பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து விடவும்.

உருளைக்கிழங்கை பெரியதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றை தாளித்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வைத்துகொள்ளவும்.

பின் இஞ்சி- பூண்டு விழுதை சேர்த்து வதக்கி, அதனுடன் தனியாதூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், சேர்த்து வைக்கவும்.

பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி நறுக்கிய உருளைக்கிழங்குகளை சேர்த்து வதக்கவும். அதனுடன் ஊறவைத்த பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக வேகவைத்து, கடைசியாக கரம் மசாலா சேர்த்து கலந்து இறுகியதும் மல்லி இலைகளை தூவி இறக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான உருளை பருப்பு கிரேவி ரெடி..!

More News >>