`பாஸ் ஆகாதவர்களுக்கு சம்பளம் இல்ல - 1500 ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்திய தமிழக அரசு
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் ஆசிரியராக பணியாற்றி வந்ததால் சம்பளத்தை பள்ளிக்கல்வித்துறை நிறுத்தி வைத்துள்ளது.
2010-ம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியராக பணியில் சேர்ந்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயப்படுத்தியது. அதனடிப்படையில் 2010 க்குப் பின் பணியில் சேர்ந்தவர்கள் கட்டாயம் TET தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என அரசு அறிவித்திருந்தது. இதனடிப்படையில் 1 - 8 ஆம் வகுப்புவரை பனியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்காக 2012-ம் ஆண்டு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் தேர்ச்சியடையாத ஆசிரியர்களுக்கு, மேலும் 4 ஆண்டுக்கள் அசிரியர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. மேலும், 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு, தேர்ச்சி பெறாதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தான் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.