ஆட்சி மாறிய போதும் குறையாத ரயில் கொள்ளை சம்பவங்கள்: 1.71 லட்சம் திருட்டு புகார்கள்
நம் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ரயில்களில் நடைபெற்ற திருட்டு தொடர்பாக மொத்தம் 1.71 லட்சம் புகார்கள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பதிவான புகார்கள் குறித்து விவரங்கள் தரும்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சமூக நல ஆர்வலர் ஒருவர் கேட்டு இருந்தார். அதற்கு ரயில்வே அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
மத்தியில் ஆட்சி மாறினாலும் ரயில்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது குறையவில்லை என்பது தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ரயில் திருட்டு தொடர்பாக மொத்தம் 1 லட்சத்து 71 ஆயிரம் புகார்கள் பதிவாகி உள்ளது. குறிப்பாக சென்ற ஆண்டில் (2018) மட்டும் ரயில்களில் அதிக அளவாக 36 ஆயிரத்து 584 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
திருட்டு சம்பவங்களை தடுக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கிலும் நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் பதுங்கல்: பீதியை கிளப்பிய லாரி டிரைவர் கைது