மதுரையில் ரவுடி ஓட ஓட விரட்டி கொலை
மதுரையில் ரவுடியை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று ஓட ஒட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை எம்.எம்.சி காலனியை சேர்ந்தவன் சதீஷ்குமார் என்கிற பிள்ளையார் சதீஷ். அப்பகுதியில் ரவுடியான இவன் மீது கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அனுப்பானடி பகுதியில் உள்ள ஹவுசிங் போர்டு அருகே சதீஷை அடையாளம் தெரியாத கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரவுடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை கும்பல் குறித்து அவனியாபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அடையாற்றில் மிதந்த ஆண் சடலம்- கொலையா? தற்கொலையா?