மீண்டும் உலகளவில் ட்ரெண்டான ஆர்யா ஸ்டார்க் ஆனால் இப்போ அந்த விஷயத்துக்கு இல்ல!
கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் இறுதி அத்யாயம் ஒளிபரப்பாகி வருகிறது. 2வது எபிசோடில் ஆர்யா ஸ்டார்க்கின் நிர்வாணக் காட்சி உலகளவில் ட்ரெண்டானது. இந்நிலையில், 3வது எபிசோட் வெளியாகியுள்ள நிலையில், மீண்டும் ஆர்யா ஸ்டார்க் உலகளவில் ட்ரெண்டாகி உள்ளார்.
ஆனால், இந்த முறை நிர்வாணக் காட்சிக்காக அல்ல; அதற்கு பதிலாக கேம் ஆஃப் த்ரோன்ஸின் முக்கிய வில்லனான நைட் கிங்கை ஆர்யா ஸ்டார்க் கொன்று விடுவது தான் இந்த ட்ரெண்டிங்கிற்கு காரணம்.
யாராலும் அழிக்க முடியாமல் 7 சீசன்களாக அரச குடும்பத்துக்கு தொல்லை கொடுத்து வந்த கேம் ஆஃப் த்ரோன்ஸின் வில்லன் நைட் கிங்கை சிறுமியாக இருந்து குமரியாக வளர்ந்த ஆர்யா ஸ்டார்க் கொன்றது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக்கு பயங்கர ட்விஸ்டாக அமைந்துள்ளது.
மேலும், அயன் த்ரோனில் அமர்ந்திருக்கும் செர்சியையும் கொன்று விட்டு ஆர்யா ஸ்டார்க்கே அயன் த்ரோனில் அமர்வார் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த எபிசோடில் ஆர்யா ஸ்டார்க் இறந்துவிடுவார் என மற்றொரு ரசிகர் கூட்டமும் கூறி வருகிறது. விரைவில் இதற்கான விடையை கேம் ஆஃப் த்ரோன்ஸின் வரும் எபிசோட்கள் விளக்கி விடும். அதுவரை பொறுமையாக பார்ப்போம்.
எத்தனை முறைதான் வதந்தி பரப்புவார்கள்? டி.என்.சேஷன் நலமாக உள்ளார்!