ஐந்து வருடத்தில் வாரணாசியில் ஒரேயொரு ரோடு போட்டார் மோடி! விளாசித் தள்ளும் பிரியங்கா!!

நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் நான்காவது கட்டத் தேர்தல் நடைபெறும் உன்னோவ் உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

நான் கடந்த சில வாரங்களாக சுற்றி வந்த பகுதிகளில் என்னை சந்தித்த மக்கள், 5 வருடங்களில் பட்ட துன்பங்களை கூறினார்கள். விவசாயிகளுக்கு கடனை திருப்பி செலுத்த முடியாமல் ஏற்பட்ட நஷ்டங்கள், விலைவாசி உயர்வால் நடுத்தர மக்கள் பட்ட அவஸ்தைகள் எல்லாம் சொன்னார்கள். ஏழைமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக சொல்லி கடந்த முறை ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வினர், மக்களுக்கு இன்னும் தொல்லை கொடுக்கும் வி்தமாக ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஏழை மக்களைப் பற்றி கவலைப்படாமல் சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே ஆட்சி நடத்தினார் பிரதமர் மோடி. தேர்தல் அறிவித்த பின்பு மோடி அடுத்தடுத்து தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்து வருகிறார். அவரை டி.வி.யில் பார்த்தால், ஒன்று பூங்காவில் இருப்பார். இல்லாவிட்டால் கங்கா ஆரத்தி எடுத்து கொண்டிருப்பார். ஒரு நாளும் ஏழை மக்களுடன் அவர் இருப்பதை பார்த்திருக்கவே மாட்டீர்கள்.

வாரணாசி தொகுதியில் கடந்த 5 வருடங்களில் விமானநிலையம் முதல் டவுன் வரை 15 கிலோ மீட்டர் ரோடு ஒன்றை மட்டும்தான் மோடி போட்டிருக்கிறார். இந்த கோயில் நகரத்தில் அவர் வேறொன்றும் பெரிதாக செய்து விடவில்லை.

இப்போது உங்களை தேடி வருகிறார்களே, பா.ஜ.க. தவைர்கள்! இவர்கள் இது வரை வெளிநாட்டு தலைவர்களை மட்டுமே சந்தித்து பேசி வந்தார்கள். தேர்தல் வந்ததும் உங்களை சந்திக்க வருகிறார்கள்.

இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.

ஹர்திக் பாண்ட்யா ருத்ர தாண்டவம் வீண்; 34 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி!
More News >>