எத்தனை முறைதான் வதந்தி பரப்புவார்கள்? டி.என்.சேஷன் நலமாக உள்ளார்!
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் குறித்து மீண்டும் நேற்றிரவு வாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரவியது. அவருக்கு மூட்டுவலி பிரச்னை இருந்தாலும் உடல் நலமாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்திய மக்களுக்கு வெளிக்காட்டியவர் டி.என்.சேஷன். எத்தனை தலைமை தேர்தல் ஆணையர்கள் வந்தாலும் சேஷனை போல் புகழ் பெற்றிருக்க முடியாது. அந்த அளவுக்கு கடினமாக செயல்பட்டவர்.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக திறம்பட பணியாற்றியவர். வயது முதிர்ந்த நிலையில் அவர் தனது மனைவியுடன் சென்னைக்கு அருகே ஒரு முதியோர் இல்லத்தில் சேர்ந்தார். கடந்த2018ம் ஆண்டு ஏப்ரலில் அவரது மனைவி ஜெயலட்சுமி காலமானார்.
அதைத் தொடர்ந்து, டி.என்.சேஷனும் காலமாகி விட்டதாக வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. அதற்கு பின் அது வதந்தி என்று தெளிவுபடுத்தப்பட்டது. மீண்டும் இந்த ஆண்டு ஏப்ரலிலும் அதே போல் வதந்தி பரவியது. இப்போது மூன்றாவது முறையாக நேற்றிரவு வாட்ஸ் அப்பில் அதே போன்ற வதந்தி பரவியது.
இது பற்றி விசாரித்த போது, சேஷன் மூட்டு வலியால் அவதிப்பட்டாலும் நல்ல உடல்நிலையில்தான் இருக்கிறார் என்று தகவல் வந்தது.
தப்பை தட்டி கேட்ட போலீஸ் அதிகாரி மீது கற்கள் வீசி தாக்குதல்